நெய்வேலிக்கு சென்று நெய்வேலி அணியையே வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய அதிரை AFFA U-13 அணி

அதிரையின் தலைசிறந்த கால்பந்து அணிகளுள் ஒன்றான AFFA அணி அடுத்த தலைமுறை கால்பந்து வீரர்களை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் தொடங்கி இருக்கும் 13 வயதுக்கு உட்பட்டோர், 15வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான கால்பந்து தொடரில் விளையாடுவதற்காக AFFA இளம் அணியினர் நேற்று காலை நெய்வேலி புறப்பட்டு சென்றனர்.

இதில் 13 வயதுக்குட்பட்டோருக்கான முதல் 2 லீக் போட்டிகளில் ஈரோடு அணியையும், பண்ருட்டி அணியையும் AFFA U13 அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றனர். இதையடுத்து நடைபெற்ற சென்னைக்கு எதிரான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-0 என்ற கோல் கணக்கில் AFFA வீரர்கள் அசத்தல் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினர். இதையடுத்து நெய்வேலிக்கு எதிரான காலிறுதி போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. இதையடுத்து நடைபெற்ற டை பிரேக்கரில் 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு AFFA U-13 அணி முன்னேறியுள்ளது.

Close