அதிரை WCC நடத்திய கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது RCCC அணி! (படங்கள் இணைப்பு)

அதிரை மேலத்தெரு WCC நடத்தும் 19ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி நமதூர் மேலத்தெரு மருதநாயகம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகின்றது. கிரிக்கெட் கவர் பந்தில் நடைபெறும் இத்தொடர் போட்டியில் அதிரையின் தலைசிறந்த கிரிக்கெட் அணிகள் கலந்துக்கொண்டு விலையாடி வருகின்றனர்.

இதன் இறுதி ஆட்டம் நேற்று மாலை துவங்கி நடைபெற்றது. இதில் அதிரை WCC அணியை எதிர்த்து RCCC அணி களமிறங்கியது. இதில் இரண்டுஅணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இருப்பினும் இதில் RCCC அணி அபார வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச்சென்றது.

பரிசு விபரங்கள்:
முதல் பரிசு: அதிரை RCCC – ரூபாய் 20,019

இரண்டாம் பரிசு: அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் – ரூபாய் 15,019

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close