ஆஸ்திரேலியாவில் தொழுகையை பார்த்து வியந்து இஸ்லாத்தை ஏற்ற கிருஸ்துவ சகோதரர்!

ஆஸ்திரேலியாவில் பிரபல தாவா செண்டரான TRA என்ற அமைப்பின் சார்பில் தாவா நடைபெற்று கொண்டு இருந்தது. அங்கு வந்த ஒரு கிருஸ்த்துவர் தனக்கு உள்ள இஸ்லாத்தை பற்றி கேள்விகளை கேட்டு உள்ளார். அவர்களும் விளக்கம் கொடுத்து உள்ளனர். விளக்கம் கொடுத்து விட்டு தாவா செய்தவர்கள் தொழுகைக்கு நேரம் ஆன உடன் தொழுகையை நிறைவேற்ற ஆயத்தம் ஆகி அருகில் தொழ ஆரம்பித்தனர். எல்லாவற்றையும் கவனித்த அந்த கிருஸ்துவ சகோதரர் அவர்களுடன் சேர்ந்து தொழ ஆரம்பித்து உள்ளார். 

தொழுகைப் பற்றி தெரியா விட்டாலும் அவர்கள் செய்வது போன்று செய்து உள்ளார். பின்னர் தொழுகை முடித்து எழுந்தவுடன் தாவா செய்தவர்களுக்கு அல்லாஹ் நற்செய்தி வைத்து இருந்தான். எழுந்த அந்த கிருஸ்துவ சகோதரர், உங்கள் செயல்களை பார்த்தேன் மிகவும் ஈர்க்க கூடியதாகவும் மிக வியக்க தக்கதாகவும் உள்ளது இறைவன் அவனுக்கு ஒதுக்கிய நேரத்தில் தொழுக அவனை வணங்க தாமதிக்காமல் தொழுகை செய்து உள்ளீர்கள். அதனால் நான் இஸ்லாத்தை ஏற்று கொள்கிறேன் என்று சொல்லி ஏற்றார் அல்ஹம்துலில்லாஹ்.

Advertisement

Close