அதிரை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற விழிப்புணர்வு நாடகம்!(படங்கள் இணைப்பு)

இன்று மாலை அதிரை பேருந்து நிலையம் அருகில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் விழிப்புணர்வு வீதி நாடகம் நடந்தது. குழந்தைகளின் உரிமைகள், குழந்தைகளின் கல்விக்காக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்தும், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவ, மாணவியருக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு, குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை களைதல் போன்றவை குறித்து, விழிப்புணர்வு நாடகம் நிகழ்த்தினர்.

இந்த நாடகத்தை பள்ளி மாணவர்கள் ,பெற்றோர்கள் ,பொது மக்கள் என ஏராளமானோர் கண்டுகளித்தனர். 

Advertisement

Close