பட்டுக்கோட்டையில் எஸ்டிபிஐ கட்சியினர் நடத்திய மனித சங்கிலி போராட்டம் !(படங்கள் இணைப்பு)

பட்டுக்கோட்டையில் இன்று மாலை எஸ்டிபிஐ கட்சியினர் தமிழகத்தில் அதிகரித்து வரும் லஞ்சம் ஊழலை கட்டுப்படுத்த கோரியும், தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமல்படுத்த கோரி மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டதிற்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z.முஹம்மத் இல்யாஸ் அவர்கள் தலைமை தாங்கினார்கள் . இதில் மாவட்ட துணை தலைவர் M.அமானுல்லா அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள் .மதுக்கூர் நகர தலைவர் அசர் அவர்கள் கண்டன கோசங்கள் எழுப்பினார்கள் .மேலும் வழக்கறிஞர் அதிரை நிஜாம் அவர்கள் சிற்றுரை வழங்கினார்கள்.கண்டன உரையை SDTU மாநில துணை தலைவர் சம்சுதீன் அவர்கள் நிகழ்த்தினார்கள் . மேலும் இதில் எஸ்டிபிஐ கட்சியின் புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் ஆசாத்,வழக்கறிஞர் முஹம்மத் தம்பி , அதிரை நகர தலைவர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இறுதியாக நன்றியுரை அதிரை நகர துணை தலைவர் அன்வர் அவர்கள் ஆற்றினார்கள். மேலும் லஞ்சம் ஊழலுக்கு எதிரான துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

Advertisement

Close