தஞ்சை–பட்டுக்கோட்டை,மன்னார்குடி–பட்டுக்கோட்டை இடையே ரயில் பாதைகள் அமைத்திட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

தஞ்சை – பட்டுக்கோட்டை, மன்னார்குடி – பட்டுக்கோட்டை இடையே ரயில் பாதைகள் அமைத்திட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

தஞ்சை எம்.பி. பரசுராமன் தனது தொகுதிக்குத் தேவையான பல்வேறு ரெயில் பாதைகள், பயணிகள் வசதி, ரெயில்வே ஊழியர் நலன், லெவல் கிராசிங்கில் பல்வேறு மேம்பாலங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய ரெயில் அறிவிப்பு, பல நகரங்களை இணைக்கும் சேவையை விஸ்தரிப்பது ஆகியவை குறித்து பல்வேறு கோரிக்கைகளை ரெயில்வே அமைச்சகத்திடம் முன்வைத்து, அவற்றை நிறைவேற்றக்கோரி ரெயில்வே மந்திரியிடம் பலமுறை வலியுறுத்தி வந்தார்.

இவற்றின் பயனாக பல்வேறு புதிய ரெயில் பாதைகள், பாதை இரட்டிப்பு பணிகள், லெவல் கிராசிங்குகள், நிலைய மேம்பாடு, பயணிகள் வசதி ஆகியவற்றுக்காக ரெயில்வே நிர்வாகம் நிதி ஒதுக்கி இருப்பதாக சமீபத்தில் சமர்பிக்கப்பட்ட ரெயில்வே பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

தஞ்சை – விழுப்புரம் (192 கிலோ மீட்டர்) புதிய பாதை அமைக்கப்படவுள்ளது. நீடாமங்கலம் – மன்னார்குடி பாதையை மீண்டும் அமைப்பதுடன், மயிலாடுதுறை – திருவாரூர் – பட்டுக்கோட்டை – பேராவூரணி – காரைக்குடி – திருத்துறைப்பூண்டி –அகஸ்தியம்பள்ளி ரயில்பாதைகளும் அமைக்கப்பட விருக்கின்றன. புதிய பொலிவுடன் 47.2 கிலோ மீட்டர் தூரத்திற்கான தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை ரெயில்பாதையும், மன்னார்குடி பட்டுக்கோட்டை ரெயில் பாதையும் அமைக்கப்பட உள்ளன.

தஞ்சாவூர் –பொன்மலை இரட்டிப்புபாதை விரைவு படுத்தப்பட விருக்கிறது. ரெயில் போக்குவரத்தை மேம்படுத்தக்கூடிய விதத்தில் ரெயில்பாதை புதுப்பிக்கப்படவுள்ளது. நாகூர் – தஞ்சை – திருச்சிராப்பள்ளி பாதையும் புதுப்பிக்கப்படவுள்ளது.

தஞ்சைக்கும் – திருச்சிக்கும் இடையே உள்ள லெவல் கிராசிங் எண். 216 பதிலாக ஒரு சாலை மேம்பாலம், லெவல் கிராசிங் எண்.302 திட்டை–தஞ்சாவூர் சாலை மேம்பாலம் லெவல் கிராசிங் எண். 22, தஞ்சாவூர் – திருவாரூர் சாலை மேம்பாலம் ஆகியவை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சமிக்ஞை (சிக்னலிங்) மற்றும் தொலை தொடர்பு மேம்பாட்டின் கீழ் விழுப்புரம் – தஞ்சாவூர் இடையிலான 192 கிலோ மீட்டர் பாதையில் ஒளியிழை கேபிள்கள் (ஆப்டிக் பைபர் கேபிள்கள்) அமைக்கப்படவிருக்கின்றன. தஞ்சாவூர் –மாயவரம், தஞ்சாவூர் – திருவாரூர் பகுதி களில் 60 குடியிருப்புகள் கட்டப்படவிருக்கின்றன.

2016–ம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெறவுள்ள மகாமகம் விழாவை முன்னிட்டு கும்பகோணம், தஞ்சாவூர், மயிலாடுதுதுறைக்கு வருகைபுரியும் பயணிகள் வசதிக்காக மின் விநியோகம், மின் விளக்குகள், தண்ணீர் வசதி, பேட்டரி ரீசார்ஜ் செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்பட விருக்கின்றன.

தஞ்சை ரெயில் நிலையத்தை மாதிரி ரெயில் நிலையமாக மாற்றவும் ரெயில்வே பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு போதிய நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Close