சவுதியில் நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம்

பங்களாதேசை சேர்ந்த நபரான முஹம்மது அலி அக்பர் சவுதியின் தவாத்மியில் கார் ஓட்டும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் இறந்து விடுகிறார்.. வழக்கின் முடிவில் குற்றம் சாட்டப்பட்ட நபர் விபத்தில் இறந்த குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரியால் நஷ்ட ஈடு கொடுத்து விடுதலை பெற வேண்டும் என்ற தீர்ப்பு வெளியிடபடுகிறது.

மூன்று இலட்சம் என்பது இலங்கை ரூபாய் மதிப்பில் ஒரு கோடிக்கு அதிகம் ஆகும் அல்லது இஸ்லாமிய சட்டத்தின் படி கொலையுண்டவரின் ரத்த உறவுகள் மன்னிக்கும் பட்சத்தில் நஷ்டஈடு இல்லாமல் விடுதலையாகலாம் மன்னிப்பு கிடைக்காத பட்சத்தில் நஷ்டஈடு கொடுத்து மட்டுமே விடுதலையாகும் சூழலில் அவர் அகப்பட்டுக் கொள்கின்றார்.

வறுமையில் வாடும் இவரால் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து விடுதலையாகும் சூழல் இல்லை இதனால் சிறை வாசம் அனுபவிக்கும் நிலை ஏற்படுகிறது .. இவரது நிலையை அறிந்த அல் ராஜ்ஹி என்ற நபர் இவரது நஷ்டஈட்டை கொடுத்து விடுதலையாக உதவி செய்கின்றார்.

Advertisement

Close