அதிரையில் காணாமல் போன ஆலிம் ‘அல்லாஹ்வின் உதவியை கொண்டு’ கிடைத்துவிட்டார்

அதிரை காலியார் தெருவை சேர்ந்தவர் முஹம்மது இஸ்மாயில். இவரது மகன் ஜமால் முஹம்மது (38). இவர் சற்று உடல்நலம் பாதிப்படைந்து காணப்பட்டார். இவர் நேற்று முன்தினம் பட்டுக்கோட்டை சென்றுள்ளார். இரவாகியும் இவர் ஊர் திரும்பாததால்  இவரின் குடும்பத்தார்கள் காணவில்லை என  வருத்தம் அடைந்தனர்.
அதனை தொடர்ந்து இன்று இரவு 8:30 மணியளவில் சம்பைட்டிணத்தை சேர்ந்த சஃபியுல்லாஹ் என்பவர் காணாமல் போன ஜமால் முஹம்மது அவர்கள்  பண்ணைவயல் சாலையில் இருப்பதை கண்டவுடன் சஃபியுல்லாஹ் என்பவர் மல்லிப்பட்டினத்திற்கு அழைத்து வந்து அவரின்  குடும்பத்தினற்கு தொடர்பு கொண்டுள்ளார்.இதனையடுத்து ஜமால் முஹம்மது அவர்களின் உறவினர்கள் மல்லிப்பட்டினம் வந்ததும் அவர் ஒப்படைத்து சென்றார்.

Advertisement

Close