அதிரை சுரைக்காய் கொள்ளையில் தாழ்வாக செல்லும் ஆபத்தான மின்கம்பி! (படங்கள் இணைப்பு)

அதிரை சுரைக்காய் கொள்ளை குடியிருப்பு பகுதியில் இரண்டு மின்கம்பங்களுக்கும் இடையே செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக 8 அடி உயரத்திற்கு கீழ் தொங்கியவாறு உள்ளது. சிறுவர்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் இவ்வாறு செல்லும் ஆபத்தான மின்கம்பத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இப்பகுதியில் பல மாதங்களாக இந்த பிரச்சனை நிலவுகறது. 

இது குறித்து அதிரை மின்சார வாரிய ஊழியர்களிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்ற குற்றச்சாட்டும் மக்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இப்பிரச்சனைக்கு உடனே நடவடிக்கை எடுக்குமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Advertisement

Close