பாப்புலர் ஃப்ரண்ட் தினம்: மேல்முறையீட்டில் காவல்துறை அனுமதி வழங்கிட உயர்நீதிமன்றம் உத்தரவு!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உதயமான தினமான பிப்ரவரி 17 அன்று மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை சென்னை மற்றும் திண்டுக்கல்லில் நடத்த திட்டமிடப்பட்டு காவல்துறையிடம் முறையாக அனுமதி கோரப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் பிப்ரவரி 14 அன்று காவல்துறை பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 16 அன்று அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடினோம். நீதிமன்றத்தில் காவல்துறை முன்வைத்த பல பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிபதி அனுமதி வேண்டி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை பிப்ரவரி 17 அன்று தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில் நீதி வேண்டி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீடு வழக்கு இன்று (பிப்ரவரி 27) நீதியரசர்கள் அக்னி கோத்ரி மற்றும் வேணுகோபால் தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் நீதியரசர்கள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கிட உத்தரவிட்டார்கள்.

இறைவனின் உதவியோடு நீதியை வென்றெடுத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை மார்ச் 14 அன்று சென்னையிலும் , மார்ச் 15 அன்று திண்டுக்கலிலும் நடத்த முடிவு செய்துள்ளது. ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்தோம் என்ற முழக்கத்தோடு நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இப்படிக்கு
 M.முகம்மது சேக் அன்சாரி,
மாநில பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Advertisement

Close