Adirai pirai
posts இந்தியா

வைபை வசதி, சிசிடிவி கேமரா, ஈ டிக்கெட் – ”நவீன” ரயில் பட்ஜெட் தாக்கல்!

மத்திய அரசின் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று 2015-2016 ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டினை தாக்கல் செய்தார். 400 ரயில் நிறுத்தங்களில் வைபை வசதி வழங்கப்படும் என்றும், 970 தரைப்பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் கட்டப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படாது என தெரிவித்துள்ள அமைச்சர், புதிய ரயில்களுக்கான எந்த ஒரு அறிவிப்பினையும் வெளியிடவில்லை. 138 என்ற எண் குறைதீர் மையத்தின் எண்ணாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய விபரங்கள் வருமாறு:

* தூய்மை இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு ரயில்வேயில் முன்னுரிமை 
* பாதுகாப்பான பயணத்துக்கு ரயில்வே உறுதியளிக்கும்
* பெண்கள் பயணிக்கும் பெட்டிகளில் கண்காணிப்பு காமிராக்கள்:
* மிகவும் பின் தங்கிய, தொலை தூரப் பகுதிகளுக்கு ரயில் இணைப்பு வழங்க திட்டம்
* கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கு கீழ் படுக்கை வசதி கிடைக்க முன்னுரிமை
* சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் பஸ்-ரெயில்களுக்கு ஒரே டிக்கெட் வழங்கும் முறை
* மூத்த குடிமகன்களுக்கு சக்கர நாற்காலிகள் வசதி
* லெவல் கிராஸிங் பாதுகாப்புக்கு 6,581 கோடி ரூபாய் ஒதுக்கீடு செயப்பட்டுள்ளது.
* ரயில் பெட்டிகளில் தீ விபத்தினை எச்சரிக்கும் கருவி பொருத்தப்படும்.
* கடற்கரை வழியாக நாகர்கோவிலுக்கு இணைப்பு வசதி செய்து தரப்படும். (சென்னையில் இருந்து கடற்கரை வழியாக ராமநாதபுரம் வரை இருப்புப் பாதை உள்ளது. இனி ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வழியாக கிழக்கு கடற்கரை நகரங்களையும் இணைத்து நாகர்கோவிலுக்கு புதிய இருப்புப் பாதை அமைக்கப்படும்) 
* மாநிலங்களுடன் இணைந்து கூடுதல் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
* அனைத்து மாநிலங்களிலும் மெட்ரோ ரயில்சேவை துவங்குவது குறித்து ஆய்வு செய்யப்படும்
* தேர்வு செய்யப்பட்ட 4 பல்கலைக்கழகங்களில் ரயில்வே ஆய்வு மையம் ஏற்படுத்தப்படும்.
* காகிதத்தினைப் பயன்படுத்தாமல் பயணச் சீட்டுகள் கொடுக்க நடவடிக்கை 
* 3,438 ஆளில்லா லெவல் கிராஸிங் அகற்றப்படும்
* ரயில் நிலையத்திற்குள் நுழைந்த 5 நிமிடத்திற்குள் டிக்கெட்கள் வழங்க நடவடிக்கை 
* 9 வழித்தடங்களில் ரயில்களின் வேகம் 160 கி.மீட்டராக அதிகரிக்கப்படும்.
* மெட்ரோ ரயில் வசதி 160 கிமீட்டர் முதல் 200 கிலோ மீட்டர் வரை விரிவுப்படுத்தப்படும்.
* வரும் நிதியாண்டில் 6000 கி.மீ பாதைகள் மின் மயமாக்கப்படும்
* சிறப்பான விளக்கு வசதிகளுடன் ரயில் பெட்டிகள் மாற்றியமைக்கப்படும்
* மாநிலத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ரயில் நிலையங்கள் மாற்றியமைகப்படும்.
* 9,400 கிலோ மீட்டர் தூரத்திற்கு மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்படும்.
*முக்கிய ரயில்களின் படுக்கை வசதி எண்ணிக்கை உயரும்
* சாமானியரோடு தொடர்பு கொள்ள எம்.பி. தலைமையில் குழு ஏற்படுத்தப்படும்.
* முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 120 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது
* வன விலங்குகளின் பாதுகாப்புக்காக ரெயில்களின் ஒலி குறைக்கப்படும்.
* அடுத்த 2 ஆண்டுகளில் புல்லட் ரயில் அறிமுகம் செய்யப்படும்
* பயண நேரத்தை 20 சதவீதம் குறைக்க முடிவு 
* கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் பொதுப்பெட்டிகள் இணைக்கப்படும்.
* ரயில் பெட்டிகளில் சி.சி.டி.வி. காமிரா பொறுத்த ஏற்பாடு 
* ரயில் நேரம் குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் பயணிகளுக்கு அறிவிக்க வசதி.
* தொலை பேசி மூலமும் ஸ்மார்ட் போன் மூலமும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் விற்பனை செய்ய திட்டம்
* 109 ரயில்களில் மின்னணு முறையில் உணவு வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.
* மார்ச் 1ம் தேதி முதல் பயணிகளின் குறைகளைத் தீர்க்க மொபைல் அப்ளிகேஷன் 
* எஸ்.எம்.எஸ் மூலம் குறைகளை பதிவு செய்ய ஏற்பாடு
* 24 மணி நேரமும் செயல்படும் குறைதீர் மையங்கள் அமைக்கப்படுகிறது. இதற்கான உதவி எண் 138.
* ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு யோகா பயிற்சி.
* ஏலத்தில் மின்சாரம் வாங்க முடிவு 
* ரெயில்வே கட்டிடங்களில் சூரிய மின் சக்தி வசதி ஏற்படுத்தப்படும்.
* ரெயில் பணியாளர் நியமனத்தில் வெளிப்படை தன்மைக் கடைப்பிடிக்கப்படும்
* அதிக பயணிகள், சரக்குகளை கையாள வசதியாக ரயில் திட்டங்களுக்கு ரூ. 96,182 கோடி ஒதுக்கீடு
* புதிய ரெயில்கள் அறிவிப்பு இல்லை.

Advertisement