மல்லிப்பட்டினம் அருகே சாலை விபத்து!

இன்று அதிகாலை 03.30 மணியளவில் மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டி மீது ராஜபாளையத்திலிருந்து புதுமண தம்பதியரை ஏற்றி வந்த பயணிகள் வேன் ஒன்று பின்புறமாக மோதியது.வேன் மோதியதில் சாலையின் அருகே உள்ள பாலத்தில் மூன்று மாட்டு வண்டிகள் உருண்டது. இதில் மாட்டு வண்டியை ஓட்டி வந்த வர்களில் சிலருக்கு இடுப்பிலும்,கைகளிலும் அடிப்பட்டது சம்பவ இடத்திற்கு உடனே வந்த காவல்துறையினர் காயம்பட்டவர்களை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வேன் ஓட்டுநரை கைது செய்து காவல்நிலையத்தில் விசாரித்து நடவடிக்கை எடுத்தனர்.

இந்த விபத்தில் ஒரு மாடு மட்டும் சம்பவ இடத்தில் இறந்தது.

Advertisement

Close