சவூதிக்கு வேலைக்கு செல்வது தொடர்பாக பரவிய பொய் செய்தி!

சவூதி நாட்டிற்கு வேலைக்கு இந்தியர்களை அனுப்ப முடியாது தற்காலிகமாக அணைத்து வேலைவாய்ப்புகளும் நிறுத்திவைப்பு – இந்திய அரசு திட்டவட்டம்.

சவூதி நாட்டிற்கு இந்தியர்களை அனுப்புவதை நேற்று முதல் நிறுத்தி கொள்வதாக இந்திய ஏஜென்சிகள் சுவூதி வேலை வாய்ப்பு அமைச்சகத்திற்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளனர், இந்திய அரசு சவூதியின் அமைச்சகத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தட்டிக் கழித்துள்ளது.

சவூதி அரசின் புதிய கொள்கைப்படி இந்திய தொழிலாளர்களில் 25 சதவிதம் ஆண்கள் மற்றும் பெண்களை வீட்டு வேலைக்கு அனுப்பினால் தான் அணைத்து துறைக்கும் வேலை தருவோம் என கூறிவிட்டது.

இந்த நிபந்தனையை இந்திய அரசு மறுத்து விட்டது. சவூதியில் 30 லட்சத்திற்கு மேல் இந்தியர்கள் வேலை செய்கின்றனர்.

saudigazette.com.sa

இதைபற்றி நேற்று(04615) டெல்லியில் உள்ள இந்திய தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஹிப்சுர் ரஹ்மானை தொடர்பு கொண்டு பேசியது அரப் நியூஸ் பத்திரிக்கை. அப்பொழுது அவர் கூறியது இந்திய அரசு எந்தவித ஆணையும் வெளியிடவில்லை சவூதி நாட்டிற்கு இந்தியர்களை வேலைக்கு அனுப்ப முடியாது, இது ஒரு கட்டு கதை என நிராகரித்தார்.

தகவல்  : முஹம்மது இப்ராஹிம்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close