Adirai pirai
posts

காசா மீது மீண்டும் தனது அராஜகத்தை ஆரம்பித்தது இஸ்ரேல்!

ஞாயிறு நள்ளிரவு முன்னறிவிப்புகள் ஏதுமின்றி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களினால் காசா பகுதியில் திறந்துவிடப்பட்ட சில நீர்த்தேக்கங்கள் காரணமாக காசாவின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றது.

வெள்ளப்பெருக்கின் காரணமாக 80 வீடுகள் மூன்று மீற்றர் உயர வெள்ள நீருக்குள் மூழ்கியிருப்பதோடு ஏராளமான குடும்பங்கள் ஐக்கிய நாடுகள் சபையினால் பராமரிக்கப்படும் தற்காலிகள் கூடாரங்களில் வசிக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது என அல் ஜெசீரா செய்திச்சேவை செய்தி வெளியிட்டிருக்கின்றது.

கடந்த 2007ம் ஆண்டு தொடக்கம் இஸ்ரேலின் முற்றுகைக்குள் இருந்து வரும் காசா நிலப்பரப்பு இதுவரையிலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களினால் பல சேதங்களுக்கு உற்பட்டிருக்கின்றது. காலநிலை மிகவும் மோசமாக இருந்துவரும் காசா பகுதியில் ஏற்கனவே புயல் மற்றும் பனிப்பொழிவுகள் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காசா தேசிய பாதுகாப்பு சபையின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் செயித் அல் சௌதி அல் ஜெசீரா செய்தி சேவைக்கு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது. எதுவித முன்னறிவிப்புக்களும் இன்றி ஞாயிறு நள்ளிரவு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் சில நீர்தேக்கங்கள் திறந்துவிடப்பட்டிருக்கின்றன.

இதன் காரணமாக மக்கள் அதிக பாதிப்புகளுக்கும் இழப்புகளுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கும் அதேவேளை மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.80 வீடுகள் பல நூற்றுக்கணக்கான வயல் நிலங்கள் என்பன வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் பயிர்ச்செய்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy