அதிரையில் கொண்டாடப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிறந்த நாள்!

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை (பிப்.24) தமிழகத்தில் அக்கட்சியினர் ஏழைகளுக்கு திருமணம், அன்னதானம் என பல்வேறு நிகழ்ச்சிகளை சில நாள்களாக நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று காலை 8.00 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே ஒன்று கூடிய அ.தி.மு.கவினர் நகர செயலாளர் பிச்சை தலைமையில் கொடியேற்றி  அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.முன்னதாக நகர தலைவர் முண்டாசு காதர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் . மேலும் இதனை தொடர்ந்து அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் அப்துல் அஜீஸ், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணைத்தலைவர் அபூபக்கர், நகர துணைச்செயலாளர் முஹம்மத் தமீம் , வார்டு கவுன்சிலர் அபூதாகிர், அப்துல் லத்தீப், சேனா மூனா ஹாஜா முகைதீன், சிவக்குமார், ரவிக்குமார், அதிமுக நிர்வாகிகள் , உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  

Advertisement

Close