முஸ்லிம் வாலிபரை கொன்ற எஸ்.ஐ.காளிதாஸுக்கு 15 நாட்கள் சிறை தண்டனை!

download

 

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தை சேர்ந்த செய்யது முஹம்மது என்ற வாலிபரை உதவி ஆய்வாளர் காளிதாஸ் காவல்நிலையத்திலேயே அடித்து துன்புறுத்தி படுகொலை செய்தார்.

கொலையை மறைப்பதற்காக செய்யது முஹம்மதை மூன்று முறை துப்பாக்கியால் சுட்டு தம்மை தாக்க வந்த காரணத்தினால் தற்காப்புக்காக சுட்டதாக எஸ்.ஐ.காளிதாஸ் நாடகம் ஆடினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இஸ்லாமிய இயக்கங்களும் எஸ்.ஐ.காளிதாஸ் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுத்தினார்.

வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு சென்றது, வழக்கை விசாரித்த சிபிசிஐடி அதிகாரிகள் எஸ்.ஐ.காளிதாஸ் செய்யது முகம்மதுவை அநியாயமாக படுகொலை செய்துள்ளார் என்பதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அதனைத்தொடர்ந்து எஸ்.ஐ.காளிதாஸை 15 நாள் சிறையில் அடைக்கும் படு ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Close