சவூதி தமாமில் அதிரையர்கள் கலந்துக்கொண்ட மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

auஇன்று அதிரையர்கள் கலந்துகொண்ட சமூக நல்லிணக்கத்தை பிரதிபலித்த தம்மாம் மஜுரேயாவில் நடைபெற்ற மாபெரும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி. இதில் இனம்,நாடு,மொழி,மதம் கடந்து அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

முத்தாய்ப்பாக அதிரை நண்பர்களோடு மாற்றுமத சகோதரர்களும் கலந்து கொள்ள வந்திருந்தது எனக்கு சந்தோசத்தை தந்தது. வருடாவருடம் ரமலான் மாதம் வெள்ளிக்கிழமைதோரும் இந்நிகழ்ச்சியை சவூதி நாட்டவர் மிக சிறப்பாக நடத்தி வருகிறார்.

கனிவான உபசரிப்போடு ஹைதராபாத் பிரியாணியும்,சம்சா,பஜ்ஜி போன்றவைகளும், குளிபானம்,தயிர் வகையறாக்களோடு, இனிப்பு பதார்த்தங்களும் மனதையும்,வயிறையும் நிறைவடைய செய்தது. எந்த பிரதிபலனும் பாராது இறைவனின் திருபொருத்தத்தை மட்டுமே நாடி ஏற்பாடு செய்த அந்த சவூதி மனிதருக்கு இறைவன் எல்லா வளத்தையும்,நலத்தையும் அளிப்பானாக.

-அதிரை_உபயா

Close