துபாயில் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இப்தார் நிகழ்ச்சி!!!

11421625_10203577747364144_1518783077_n-620x330

துபாயில் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இப்தார் நிகழ்ச்சி!!!

துபாய். தமிழர்களை நிர்வாகிகளாக கொண்டு செயல்படும் துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்ட்ர் ரமலான் மாதம் முழுவதும் இப்தார் நிகழ்ச்சியில் த‌மிழ‌க‌ பார‌ம்பரிய‌த்துட‌ன் கூடிய‌ நோன்புக் க‌ஞ்சியினை வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து.

இந்த ஏற்பாடுக‌ள் ஈமான் அமைப்பின‌ரால் துபாய் தேரா ப‌குதியில் உள்ள‌ குவைத் ப‌ள்ளி என்ற‌ழைக்க‌ப‌டும் லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜித் பள்ளி வளாகத்திலும் அதன் அருகில் உள்ள இடங்களிலும் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌. தின‌மும் 5000 க்கும் மேற்ப‌ட்டோர் இந்த‌ இஃப்தார் என்ற‌ழைக்க‌ப்ப‌டும் நோன்பு துற‌ப்பு நிக‌ழ்வில் ப‌ங்கேற்கின்ற‌ன‌ர்.

இதில் நோன்புக் க‌ஞ்சியுட‌ன், ச‌மோசா, வ‌டை, ப‌ழ‌ம், மின‌ர‌ல் வாட்ட‌ர், பேரித்த‌ம் ப‌ழ‌ம் உள்ளிட்ட‌வை வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. இதற்காக தினமும் பல ஆயிரம் திர்ஹம் செலவிடப்படுகிறது. சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன என்கிறார் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் 150 பேருடன் துவங்கிய இச்சிறு நிகழ்வு இன்று பிரம்மாண்டமாக ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில் நடைபெற்று வருகிறது.

முதல் நாளான நேற்று 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் மற்றும் பொது செயலாளர் லியாக்கத் அலி வழிகாட்டுதலுடன் ஈமான் அமைப்பின் துணை பொது செயலாளர் ஏ. முஹம்மது தாஹா தலைமையில் செயலாளர்கள் தகவல் தொடர்பு செயலாளர் சாதிக்,கல்வி குழு செயலாளர் அப்துல் ரசாக் ,விழாக்குழு செயலாளர் கீழை யாசின் துணை செயலாளர் முஹைதீன் , நிர்வாகிகள் யாகூப்,காதர் சேக் ஹிதாயத்துல்லா,கூத்தாநல்லூர் ஹிதாயத்துல்லா ,மேத்தா ,உஸ்மான் அலி, அபுதாஹிர் மற்றும் படேஷா பசீர் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்

 

Close