அதிரை பள்ளிவாசல்களுக்கு வந்தன அரிசி மூட்டைகள்! (படங்கள் இணைப்பு)

20150620_132502ரம்ஜான் நோன்புக்கு கஞ்சி தயாரிப்பதற்காக பள்ளிவாசல்களுக்கு மொத்தமாக அரிசி வழங்க தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:–
ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க மொத்த அரிசி வழங்க அனுமதி கோரி பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களின் மீதும் மாவட்ட ஆட்சித் தலைவர், துணை ஆணையாளர் ஆகியோர் தணிக்கை செய்து முடிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் கடந்த 2014–ம் ஆண்டிற்கு அறிவுரைகள் வழங்கப்பட்ட போது ரம்ஜான் மாதத்தில் பள்ளிவாசல்களில் ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க மொத்த அனுமதி கோரி வரப்பெறும் மனுக்களை தங்கள் நிலையிலேயே தணிக்கை செய்து தகுதியுள்ள இடங்களுக்கு அனுமதி வழங்குமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோன்று நடப்பு 2015–ம் ஆண்டிலும் ரம்ஜான் மாத நோன்பாளர்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக பச்சரிசி வழங்குவதற்கு கடந்த ஆண்டுகளில் கடைபிடித்த முறையையே இந்த ஆண்டும் கடைபிடிக்கலாம் என அரசு அறிவுரைகள் வழங்கி உள்ளதால், ரம்ஜான் மாதத்தில் பள்ளி வாசல்களில் ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க மொத்த அனுமதி வழங்குமாறு கேட்டு பெறப்படும் மனுக்களை தங்கள் நிலையிலேயே தணிக்கை செய்து தகுதியுள்ள இடங்களுக்கு அனுமதி வழங்குமாறு மாவட்ட ஆட்சி தலைவர்கள், துணை ஆணையாளர் ஆகியோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கடந்த வருடங்களில் அதிரை பள்ளிவாசல்களுக்கு ரமலானுக்கு 4 நாட்களுக்கு முன்பே அரிசி மூட்டைகள் வந்துவிடும். ஆனால் இந்த வருடம் இன்று தான் அரிசி மூட்டைகள் பள்ளிவாசல்களுக்கு கொண்டுவரப்பட்டு லாரி மூலம் ஒவ்வொரு பள்ளிவாசல்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு தேவையான கணக்கில் அரிசி மூட்டைகள் இறக்கிவைக்கப்பட்டு வருகின்றனர்.
20150620_131531 20150620_131643 20150620_131648
Close