அதிரை பள்ளிவாசல்களுக்கு நோன்புக் கஞ்சிக்கான அரிசிகள் வழங்காததால் நிர்வாகிகள் அதிர்ப்தி!

ரம்ஜான் நோன்பு இன்று அல்லது நாளை தொடங்க இருக்கிறது. இதையொட்டி, நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக பள்ளிவாசல்களுக்கு மொத்தமாக அரிசி வழங்க தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:–
ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க மொத்த அரிசி வழங்க அனுமதி கோரி பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களின் மீதும் மாவட்ட ஆட்சித் தலைவர், துணை ஆணையாளர் ஆகியோர் தணிக்கை செய்து முடிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் கடந்த 2014–ம் ஆண்டிற்கு அறிவுரைகள் வழங்கப்பட்ட போது ரம்ஜான் மாதத்தில் பள்ளிவாசல்களில் ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க மொத்த அனுமதி கோரி வரப்பெறும் மனுக்களை தங்கள் நிலையிலேயே தணிக்கை செய்து தகுதியுள்ள இடங்களுக்கு அனுமதி வழங்குமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோன்று நடப்பு 2015–ம் ஆண்டிலும் ரம்ஜான் மாத நோன்பாளர்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக பச்சரிசி வழங்குவதற்கு கடந்த ஆண்டுகளில் கடைபிடித்த முறையையே இந்த ஆண்டும் கடைபிடிக்கலாம் என அரசு அறிவுரைகள் வழங்கி உள்ளதால், ரம்ஜான் மாதத்தில் பள்ளி வாசல்களில் ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க மொத்த அனுமதி வழங்குமாறு கேட்டு பெறப்படும் மனுக்களை தங்கள் நிலையிலேயே தணிக்கை செய்து தகுதியுள்ள இடங்களுக்கு அனுமதி வழங்குமாறு மாவட்ட ஆட்சி தலைவர்கள், துணை ஆணையாளர் ஆகியோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிலையில் அதிரையில் உள்ள பள்ளிவாசல்களுக்கு இதுவரையிலும் அரிசி மூட்டைகள் வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. நேற்றைய தினம் அரசி மூட்டைகள் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்பட உள்ளதாக நமது தளத்தில் சிலர் தந்த தகவலின் அடிப்படையில் பதியப்பட்டது. ஆனால் இன்னும் அரசி மூட்டைகள் வழங்கப்படாததால் பள்ளிவாசல் நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். சென்ற ஆண்டுகளில் ரமலான் துவங்குவதற்க்கு சில நாட்களுக்கு முன்னர் அரசி மூட்டைகள் வந்திறங்கும் நிலையில் இந்த வருடம் இன்னும் வழங்கப்படவில்லை என்று பள்ளிவாசல் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close