ஷார்ஜாவில் அதிரைக்கு பெருமை தேடித்தந்த சிறுவர்கள்! (படங்கள் இணைப்பு)

sharjahஅதிரை ஆஸாத் நகர் (தரகர் தெரு)வை சேர்ந்தவர் ராஜிக் அகமது, அமீரக ஷார்ஜாவில் உள்ள பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனத்தில் அலுவலராக பணியாற்றி வரும் இவர் குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார்.இவரது மகன் R.முஹம்மது இர்ஃபான். அங்குள்ள கல்ஃப் ஆசியன் ஆங்கிலப் பள்ளியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் பள்ளியில் ‘என் அம்மா’ என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் முதல் இடம் பெற்று அதற்கான பாராட்டு சான்றிதழை பெற்றுள்ளார்.
மேலும் மாணவியர்கள் பிரிவில் இவரது மகள் R. ஃபரீனா இப்போட்டியில் முன்றாம் இடம் பெற்று அதற்கான பாராட்டு சான்றிதழை பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் சக மாணவர்கள்,  பெற்றோர்கள்,  உறவினர்கள், பாராட்டி வாழ்த்தினர்.ss1

ss2

Close