துபாயில் 75 அதிரை குடும்பத்தினர் கலந்துக்கொண்ட சம்சுல் இஸ்லாம் சங்க GET TOGETHER நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

அமீரகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் அமீரக ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பொதுக்குழு மற்றும் ஆலோசனை கூட்டம் கடந்த (30-01-2015) அன்று துபாயில் நடைபெற்றது. 

அதில் புதிதாக நிர்வாகிகள் தெர்தேடுக்கபட்டனர் . இதனை அடுத்து புதிய நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது அதன்படி        (20-02-2015) வெள்ளிக்கிழமை இன்று முஷ்ரிஃப் பார்க்கில் புதிய நிர்வாகிகளின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் எதிர்வரும் காலங்களில் அதிரை மற்றும் துபையில் செய்ய வேண்டிய முக்கிய செயல்திட்டங்களை விளக்கும் ஆலோசனைகள் நடைபெற்றது .வந்து இருந்த அனைவருக்கும் பகல் உணவு ஏற்பாடு  செய்யப்பட்டு இருந்தது. 

இந்நிகழ்வில்  சுமார் 75 குடும்பத்தினர் மற்றும் 300க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை வெவ்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.


செய்தி மற்றும் படங்கள்: ஜமாலுத்தீன் நூர் முஹம்மது.

Advertisement

Close