Adirai pirai
Ramalan special உள்ளூர் செய்திகள்

அதிரையர்கள் ஏராளமானோர் ஜித்தாவில் ஒன்றுகூடிய அய்டாவின் இஃப்தார் நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

image

ஜித்தாவில் உள்ள அய்டா அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சி 24.06.2015 புதன் கிழமை அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறுவன் இம்ரான் (த/பெ. ஏ.ஜே.தாஜுத்தீன்) கிராத் ஓத, அய்டாவின் செயலாளர் சகோ. ஜஃபருல்லாஹ் வரவேற்புரையுடன், அய்டாவின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் இந்தியன் ஃபெடர்னிட்டி ஃபாரம் ஜித்தா தமிழ் பிரிவு தலைவர் கே.எம்.ஏ சரீப் அவர்கள் ரமலானில் நம் கடைமைகள் என்ற தலைப்பில் மார்க்க சொற்பழிவாற்றினார்.

அய்டாவின் துணைத் தலைவர் சகோ. அஸ்லம் நன்றியுரை வழங்க இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

நிகழ்ச்சியினை அய்டாவின் தலைவர் சகோ. ரஃபியா அஹமது தொகுத்து வழங்கினார்.

ஜித்தாவில் வாழும் நுற்றுக்கணக்கான அதிரை சகோதரர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

image

image

image

image

image