அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை நடத்திய மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 24 வது மாதாந்திர மெகா கூட்டம் 6/06/2015 வெள்ளிக்கிழமை  இஃப்தார் நிகழ்ச்சியுடன் இனிதே நடைபெற்றது. 

கிராத்                       :  சகோ. சலீம்
முன்னிலை             : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
நிகழ்ச்சி தொகுப்பு   : சகோ. நெய்னா முகமது
சிறப்பு பயான்        : மௌலவி சரபுதீன்

ரமலான் பிறை9-ல் ரியாத் பத்தாவில் உள்ள கிளாசிக் ரெஸ்டாரென்ட்டில் இஃப்தார் நிகழ்ச்சியுடன் இனிதே நடைபெற்றது. இதில் சுமார்  70 க்கும் மேற்பட்ட அதிரை வாசிகள் குடும்பத்துடன் வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

சிறப்பு பேச்சாளராக மௌலவி சரபுதீன் ஆலிம் அவர்களின் ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிம்கு செய்ய வேண்டிய கடமைகள்,  நோன்பு, ஜக்காத்,ஃபித்ரா பற்றிய விளக்கம் மக்கள் மத்தியில் பிரயோஜனமாக இருந்தது. கூட்டத்தில் ஜக்காத், சதக்கா, ஃபித்ரா-வை நோன்பு  25க்குள் வசூலித்து தலைமையகத்துக்கு அனுப்புவது என  முடிவு செய்யப்பட்டது.

அனைத்து மாதாந்திர கூட்டம் நடத்துவதற்கு இடமும், ஒத்துழைப்பும் வழங்கி கொன்டிருக்கும்  நமதூர் ( ஹாரா ) வாசிகளுக்கு ரியாத் பைத்துல்மால் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்ளப்பட்டது.

அடுத்த அமர்வு இன்ஷாஅல்லாஹ் வரும்  ஜூலை 24-ல் ஹாராவில் நடத்துவதென  கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டன. இக் கூட்டத்திற்கு வருகை தந்த புதிய, பழைய உறுப்பினர்களுக்கு அதிரை பைத்துல்மால் மற்றும் ரியாத் கிளையின் சார்பாக மனமார்ந்த  நன்றியை தெரிவிக்கப்பட்டது. கூட்ட முடிவில் அகமது மன்சூர் நன்றி கூறினார்.

 

 

Close