ஓருநாள் கிரிக்கெட்டில் பேட்டிங் பவர் பிளே கிடையாது! அனைத்து நோபால்களுக்கும் ஃபிரீ ஹிட்!

image

ஒருநாள் கிரிக்கெட் விளையாட்டு, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதாக மாறிக்கொண்டே வருகிறது. இதனால், ஒரு அணி 400 ரன்களுக்கு மேல் எடுப்பது கூட சர்வ சாதாரணமாகிவிட்டது.தற்போது பவௌலர்களூக்கு சாதகமாக சில மாற்றங்கள கொண்டு வரபட்டு உள்ளது.

பர்படாசில் நடந்த ஐ.சி.சி ஆண்டு இறுதி பொதுக்குழுக் கூட்டத்தில் கிரிக்கெட் போட்டியில் சில முக்கிய விதிமுறைகளை மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக 3 விதிமுறைகள் மாற்றம் கொண்டு வரபட்டு உள்ளது.

முக்கியமாக பேட்டிங் பவர் பிளே ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளில் 15 மற்றும் 40வது ஓவர்களில் இதுவரை பேட்டிங் பவர் பிளே இருந்து வந்தது.

அதோடு கடைசி 10 ஓவர்களில் 30 அடி சர்க்கிளுக்கு வெளியே 5 பீல்டர்களை நிறுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் 41 முதல் 50 ஓவர்கள் வரை 4 பீல்டர்களே நிறுத்தப்பட்டு வந்தனர்.

மேலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இனி எல்லா நோபால்களுக்கும் பிரி ஹிட்டாக ஆடுவதற்கும் விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜுலை 5ஆம் தேதி முதல் இந்த விதிமுறைகள் அமலுக்கு வருவதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

Close