ஆம்பூரில் பதற்றம்! போலிஸ் முஸ்லிம்கள் இடையே கலவரம்! (படங்கள் இணைப்பு)

image

ஆம்பூரில் விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் நபர் மரணமடந்ததையொட்டி ஆம்பூர் காவல்நிலையத்திற்கு தீ வைத்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் காதர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஷமீல் அகமது என்பவர் உள்ள தனியார் காலனி தொழிற்ச்சாலையில் வேலை செய்து வந்தார். அவருடன் முன்பு பணியாற்றிய பெண் ஒருவருக்கு மனிதாபிமான அடிப்படையில் குடும்ப பிரச்சினையை தீர்க்க உதவியிருக்கிறார்.

image

இந்நிலையில் அந்தப் பெண் திடீரென மாயமான நிலையில், அதற்கு காரணம் ஷமீல்தான் என பள்ளிகொண்டா காவல்துறையினர் கடந்த 15-ம் தேதி ஷமீலை விசாரணைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

காவல் ஆய்வாளர் மார்டின் பிரேம்ராஜ்

அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மார்டின் பிரேம்ராஜ் கடந்த 15ஆம் தேதியன்று ஷகிலை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். விசாரணையின் போது அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஷகில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதில் ஆத்திரமடைந்த ஆம்பூர் பகுதி இஸ்லாமியர் ஆம்பூர் காவல்துறை நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்லாமிய மக்கள் ஆர்ப்பாட்டம்

பேருந்து நிலையம் அருகே இஸ்லாமிய மக்கள் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 500க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை பலன் அளிக்காததால் தடியடியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேருந்துகளின் மீது கற்களை வீசி தாக்கியதில் 20க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் 2 கார்கள் மற்றும் ஒரு மின் பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டன.

காவல்துறையினர் மீது தாக்குதல்

இந்த போராட்டத்தை தடுக்க முயன்ற காவல்துறையினர் மீது மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். காயமடைந்த 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் நந்தகோபால் மற்றும் காவல்துறை ஐ.ஜி.மஞ்சுநாதா ஆகியோர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். அதிகாலையிலும் பதற்றம் நிலவுவதால் ஆயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

image

image

image

image

Close