அதிரையில் 700க்கும் மேற்பட்டோருக்கு இலவச மிக்ஸி, கிரைண்டர், பேன் வழங்கப்பட்டது! (படங்கள் இணைப்பு)

20150628_153404_20150628155323538

அதிரையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கக்கூடிய இலவச மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி ஆகியவை நமதூர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இதில் எம்.பி, கலெக்டர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு இலவச பொருட்களை வழங்கினர். இதன் தொடர்ச்சியாக இன்று மதியம் 3 மணி முதல் அதிரை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இலவச மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இதில் அதிரை 1ம் வார்டு மற்றும் 2ம் வார்டு பகுதியை சேர்ந்த 700க்கும் அதிகமான மக்கள் இப்பொருட்களை வாங்கிச்சென்றனர். இதில் அதிரை அ.தி.மு.க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

இது குறித்து அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை நம்மிடம் கூறுகையில் இப்பொருட்கள் இன்னும் வழங்கப்படாத வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு விரைவில் தொடர்ச்சியாக இலவச பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

20150628_15305720150628_15260520150628_152432

Close