மதுக்கூரில் IPP நடத்திய இஃப்தார் மற்றும் பயான் நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

image

மதுக்கூரில் தமுமுக மார்க்க பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை சார்பாக பெண்களுக்கான இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி மற்றும் நோன்பு (இஃப்தார்) நிகழ்ச்சி பள்ளிவாசல் தெருவில் அமைந்துள்ள திருமண MSA மண்டபத்தில் நடைபெற்றது.
ஆலிமா பர்வீன் பானு அவர்கள்தலைமையில் ஏற்று நடத்தினர்.
ஆலிமா பர்வீன் பேகம் அவர்கள் இறைவசனம் ஓத நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.
ஆலிமா கமருன்னிஸா அவர்கள் தொழுகையினை குறித்து சிற்றுரை நிகழ்த்தினர்,இலங்கையினை சார்ந்த இஸ்லாமிய அழைப்பாளர் மெளலவி அர்ஹம் அவர்கள் அண்ணல் நபியும் (ஸல்) அன்னை ஆயிஷாயும்(ரலி) அவர்களும் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினர்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான தாய்மார்கள்,சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பான முறையில் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது.நகர தமுமுக செயலாளர் ஃபவாஸ் அவர்களின் நன்றி உரையுடனும்,மகரிப் தொழுகை ஜமாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது.
எல்லா புகழும் அல்லாஹ்கே!

-மதுக்கூர் தமுமுக

image

Close