பஜ்ரங்தள் குண்டர்கள் அட்டூழியம்!

image

உத்தரப் பிரதேச மாநிலம்
முஸஃபர் நகரில் முஸ்லிம் வாலிபர்
ஒருவர் பஜ்ரங்தள் குண்டர்களால்
தாக்கப்பட்டு வீதியில் இழுத்துச்
செல்லப்பட்ட சம்பவம் அங்குப் பதற்றத்தை
ஏற்படுத்தியுள்ளது.
முஸஃபர் நகர் ஷாம்லி பகுதியைச்
சேர்ந்தவர் ரியாஸ். பஜ்ரங்தள்
அமைப்பைச் சேர்ந்த குண்டர்கள் சிலர்
இவரை வீதி வழியாக இரத்தம்
சொட்டச் சொட்ட அடித்து இழுத்துச்
சென்ற வீடியோ ஒன்று வெளியாகி
பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. அவரை
அடித்து இழுத்துச் செல்லும்
குண்டர்கள், “இவன் மாட்டை
அறுத்துவிட்டான். மாட்டை
அறுப்பவர்கள் ஒவ்வொருவருக்கும்
இதுதான் கதி” என்ற
கூவிக்கொண்டும்,
முஸ்லிம்களுக்கு எதிராக
கோஷங்களை எழுப்பிக் கொண்டும்
செல்லும் வீடியோ காட்சிகள்
காண்போரைப் பதைக்க வைப்பதாக
உள்ளது.
சுமார் இரண்டு மணி நேரம்
இவ்வாறு வீதி வழியாக அடித்து
இழுத்து சென்றதன் இறுதியில்
சம்பவ இடம் வந்த காவல்துறையினர்,
சம்பந்தப்பட்ட குண்டர்கள் மீது
நடவடிக்கையோ கைதோ செய்யாமல்
கொடூரமாக தாக்கப்பட்டு இரத்தம்
சொட்ட நிற்கும் ரியாஸைக்
காவல்நிலையம் இழுத்துச் செல்லும்
காட்சியும் அந்த வீடியோவில்
காணப்படுகிறது.
அப்பாவி ஒருவரைத் தாக்கியக்
கொடூர கும்பல் மீது நடவடிக்கை
ஏதும் எடுக்காமல்,
தாக்கப்பட்டவரையே கைது செய்து
கொண்டு செல்லும் காவல்துறைக்கு
எதிராக கடுமையான விமர்சனங்கள்
எழுந்துள்ளன.
பிரதமர் மோடியின் சீனப்
பயணத்தில் இந்தியாவிலிருந்து
சீனாவுக்கு மாட்டிறைச்சி
ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம்
கையெழுத்தானதும் அது
தொடர்பாக சீன அதிகாரிகள் இந்திய
மாட்டிறைச்சியைச் சோதிப்பதற்காக
இந்தியா வர உள்ளதும்
குறிப்பிடத்தக்கது.

Close