திருமணத்திற்கு பெண்ணின் சம்மதம் அவசியம்???

image

நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த
வழிமுறைப்படி, கன்னிப்பெண்ணாக
இருந்தாலும்,
விதவை பெண்ணாக இருந்தாலும்,
தனக்கு தேர்வு செய்யப்படும்
மணமகனை தனக்கு
பிடித்துயிருக்கிறதா?
என்ற சம்மத்தை பெண்ணிடம் சம்மதம்
பெற வேண்டும்..
ஹதீஸ் …
கன்னிப் பெண்ணாயினும்,
விதவையாயினும் சம்மதம் பெற
வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்)
கூறிய போது கன்னிப் பெண் (சம்மதம்
தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று
கேட்டேன்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
அவளது மௌனமே அவளது
சம்மதமாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6971, 6964, 5137
என் தந்தை எனது சம்மதம் பெறாமல்
மணமுடித்து வைத்தார்.
அதனை விரும்பாத நான் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து
இதைக் கூறிய போது,
அத்திருமணத்தை ரத்து செய்தார்கள்.
அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம்
(ரலி)
நூல்: புகாரி 5139, 6945, 6969

Close