குவைத் செல்லும் சகோதரர்களுக்கு சந்தோசமான செய்தி!

image

குவைத்தில் வேலைக்கு செல்லும் நபர்களுக்கு மருத்துவ சோதனைக்கு குவைத் அரசு அனுமதி அளித்துள்ள ஒரே ஏஜென்சி கதாமத். இது மும்பையில் உள்ள அந்தேரியில் இயங்கி வருகிறது.
இந்த ஏஜென்சி 3500 ரூபாய்க்கு பதில்
24 ஆயிரம் ரூபாய் வாங்குவதாக தாக புகார் எழுந்தது. மகாராஷ்டிர அரசுக்கு 15 புகார் வந்துள்ள நிலையில் இதன் தலைமை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
இவர்கள் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை எனவு. இது குறித்து இன்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை தவிர மருத்துவ சோதனைக்கு செல்லும் நபர் மற்றும் அவருடன் செல்லும் உறவினர்கள் நிற்க கூட இடமில்லை. இதை தவிர அனைத்து மாநிலங்களிலும் உள்ள நபர்கள் ஒரே இடத்தில் மருத்துவ சோதனைக்கு செல்வதாலும் ஒரு வாரம் கூட ஆகிறது. மொத்தத்தில் தென் இந்தியாவில் இருந்து சென்று மருத்துவ சோதனை முடித்து வர குறைந்து 50000 ஆயிரம் ரூபாய் ஆகும். இது ஏழைகளுக்கு தாங்க முடியாத தொகை.
இந்த செய்தியை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்ற தொலைகாட்சி சானலுக்கு (Asianet news malayalam ) நன்றி கூறியே ஆக வேண்டும.
வெளிநாட்டில் வாழும் நட்புகளுக்கு உதவு பொருட்டு ஒரு செய்தி கூட தமிழ் செய்தி சானல்கள் செய்தி வெளியிடுவதில்லை.இது வேதனைக்குரியது நட்புகளே…

குவைத் செல்லும் சகோதர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

வெற்றி! வெற்றி!! வெற்றி!!!
குவைத்திக்கு வேலை வாய்ப்பு வரும் நபர்கள் இனி முதல் மருத்துவ சோதனை செய்ய திரும்பவும் பழைய கம்கே(GAMCA)க்கு அனுமதி அளித்துள்ளது என்று குவைத் அரசு தெரிவித்துள்ளது இதன்படி இந்தியாவில் உள்ள குவைத் தூதரகம் ஆணை வெளியிட்டுள்ளது. இதன்படி கதாமத்தின்(உரிமம்) அனுமதி ரத்து செய்து உள்ளது.
இதன்படி இனிமேல் வேலை வாய்ப்புக்கு வரும் நபர்கள் தங்களுடைய பழைய கம்கே அலுவலகத்தில் சென்று சோதனை செய்யும் இடங்களுக்கு சென்று சோதனை செய்து கொள்ளலாம். இது இன்று முதல் (29:06:2015) செய்து கொள்ளலாம். இதன் படி பழைய தொகை 4000 ஆயிரம் வரை இருக்கும்.
கடந்த ஒரு மாதம் முதல் நேற்று வரை கதாமத் அளித்த மருத்துவ சோதனை செல்லும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.குவைத்திக்கு வேலைக்கு வர மருத்துவ சோதனை, stamping மற்றும் விமான பயணச்சீட்டு சேர்ந்து அதிகபட்சமாக 20000 ஆயிரம் தான் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை செய்த Asianet news malayalam நன்றி சொல்லியே ஆக வேண்டும். இது அவர்களுடைய ஒற்றுமையை காட்டுகிறது. இதன் மூலம் இந்தியர்கள் அனைவரும் பயன் அடைந்துள்ளனர். இதை பார்த்தும் நம்முடைய தமிழ் தொலைகாட்சிகள் திருந்தவே திருந்தாது. வேண்டும் என்றால் இதை பார்த்து. ஒருவரி செய்தியாக போடுவார்கள்.
இதற்கு உதவி மகாராஷ்டிர அரசுக்கு நன்றி கூறியாக வேண்டும்.
குவைத்&இந்தியா :
குவைத் மற்றும் இந்தியா நட்புகளுக்கு பகிர்வு செய்யவும்

Close