Adirai pirai
education and jobs தமிழகம்

MD மருத்துவப் படிப்பில், காயல்பட்டினம் மருத்துவமாணவருக்கு மெரிட்டில் இடம்!

காயல்பட்டினம் தைக்காத்தெருவைச் சேர்ந்த மாணவர் எஸ்.ஓ.சுலைமான்

தனது பள்ளிப்படிப்பை காயல்பட்டினம் எல்.கே மேனிலைப்பள்ளியில் நிறைவு செய்தார். ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றதையடுத்து, தகுதி (மெரிட்) அடிப்படையில், மருத்துவம் பயின்று, 2013ஆம் ஆண்டில் எம்.பி.பி.எஸ். மருத்துவர் பட்டம் பெற்றார்.

சென்னை ஆயிஷா மருத்துவமனையில்
ஓராண்டுக்கும் மேலாக மருத்துவ
சேவையாற்றி வந்த அவர், இந்திய தலைநகர் டில்லியிலுள்ள – தலைசிறந்த கல்வி நிறுவனமான All India Institute of Medical Science – AIIMS-இல் நடைபெற்ற கலந்தாய்வில், தகுதி (மெரிட்) அடிப்படையில் தேர்வாகி, M.D. (Pathology) படிப்பை 3
ஆண்டுகள் பயிலவுள்ளார்.