துபாயில் இல‌வ‌ச‌ ச‌ட்ட‌ உத‌வி முகாம்

துபாயில் இல‌வ‌ச‌ ச‌ட்ட‌ உத‌வி முகாம் (29.06.2015) முதல் 04.07.2015 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

image

கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் வி. நந்தகுமார் இந்த‌ ச‌ட்ட‌ உத‌வி முகாமில் ப‌ங்கேற்று ஆலோச‌னை வழங்கி வருகிறார். சென்னை உயர்நீதிமன்றம், கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வழக்கறிஞர் அலுவலகங்களைச் செயல்படுத்தி வருப‌வ‌ர் வழக்கறிஞர் வி. நந்தகுமார்.

த‌மிழ‌க‌த்தில் த‌ங்க‌ளுக்குத் தேவையான‌ ச‌ட்ட‌ உத‌விக‌ள் குறித்து இந்த உதவி முகாமில் ஆலோச‌னை பெற‌லாம்.

அமீர‌க‌ வாழ் த‌மிழ் ம‌க்க‌ள் இவ்வாய்ப்பினைப் ப‌ய‌ன்ப‌டுத்தி இல‌வ‌ச‌ ச‌ட்ட‌ உதவி பெற்றுக் கொள்ள ‌கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். தொலைபேசி வாயிலாகவும் இலவச ஆலோசனை பெறலாம்.

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு எண் : 050 1321722

மின்னஞ்சல் : Advocatenandu10@yahoo.com

Close