HELMET பற்றிய சிறு ஆய்வு !!!

image

ஜுலை 1 தமிழகமெங்கும் ஹெல்மெட் பற்றிய பேச்சாகத்தான் இருந்து வருகிறது. ஹெல்மெட் விற்ப்பனையும்
சூடு பிடித்து கொண்டிருக்கின்றது நீதித்துறையின் இம்முடிவு வாகன ஓட்டிகளுக்கு அரணாக இருந்தாலும் அன்றாட வாழ்வில் இது சாத்தியமா என்றால் இது கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.

அவசர சட்டத்தினால் ஏற்ப்படும் விளைவுகள்:
              அரசின் அறிவிப்பை பயன்படுத்தி ஹெல்மெட்  தரமற்ற Helmet களை விற்றுவருகின்றனர் ISI அங்கீகாரம் பதிக்கபட்டிஇருக்கின்றது ஆனால் அது தரமானதாக இல்லை. ரூ 300 ருக்கு வீரப்பனையான ஹெல்மட் மக்களின் தேவையை பயன்படுத்தி அதனை 1000 அதற்க்கும் அதிகமான தொகைக்கு விற்று வருகின்றனர். இது பணக்காரர்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை என்றாலும் நடுத்தர சாமான்ய மக்களுக்கு இது பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தும். ஒரு வாகனத்தில் பயனிக்க வேண்டுமென்றால் 2000 ரூபாய் செலவு செய்வது அவசியமாகியுள்ளது.

அதுமட்டுமின்றி ஹெல்மெட் அனியாமல் பயனித்தால் ஒட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு புத்தகத்தை பரிமுயல் செய்வது எந்தவிதத்திலும் நியாயமாகாது .

இவர்களின் சட்டம் சரி என்றாலும். மக்களின் நலன் அதனை விட முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு இதற்கான கால அவகாசத்தை நீட்டித்து . அரசு மானிய விலையில் தரமான ஹெல்மெட் வழங்க முயற்ச்சித்திருக்களாம் என்பதே எங்களின் கருத்து.

-ஆக்கம்:அதிரை சாலிஹ்

Close