அதிரையில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை முகாம்!

தமிழகம் முழுவதும் தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்றும் ,இன்றும் நடைபெற்று வருகிறது.இதனை தொடர்ந்து  அதிரையில் இன்று காலை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் காதிர் முகைதீன் கல்லூரி எதிரில் அதிரை நகர பொறுப்பாளர் M.M.S.அப்துல் கரீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் முன்னாள் பாராளுமன்ற இளைஞர் அணி தலைவர் பிரபு , பட்டுக்கோட்டை தொகுதி இளைஞர் அணி செயலாளர் செந்தில், அதிரை நகர செயலாளர் சிங்காரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர் .மேலும் இதில் இளைஞர் அணி உறுப்பினர்கள் இதயதுல்லாஹ், யாசர், பரீத்,விக்னேஷ்,சங்கர்,ஷாகுல் ஆகியோர் உடன் இருந்தனர் .

இந்த உறுப்பினர் சேர்கை முகாமில் ஏராளமானோர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர் . மேலும் கட்சியில் இணைந்த அனைவருக்கும் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

Advertisement

Close