SMS ஐ கண்டுபிடித்தவர் மரணம்!

image

எஸ்.எம்.எஸ் என்றழைக்கப்படும் குறுஞ்செய்திகள் செல்போன்களில் அனுப்பும் முறையை முதன்முறையாக மட்டி மக்கொனென் என்பவர் கண்டுபிடித்தார். 63 வயதான இவர் பின்லாந்தை சேர்ந்தவர். கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட இவர் நீண்ட நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 20–ம் நூற்றாண்டின் மிக முக்கிய கண்டுபிடிப்பாக எஸ்.எம்.எஸ் திகழ்கிறது. எனவே, இவர் எஸ்.எம்.எஸ் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
இது குறித்து 2012–ம் ஆண்டில் பி.பி.சிக்கு அவர் அளித்த பேட்டியில் இந்த கண்டுபிடிப்பு தனது தனிப்பட்ட சாதனை அல்ல. ஒரு கூட்டு முயற்சி என தெரிவித்தார். எஸ்.எம்.எஸ் திட்டத்தை உருவாக்கும் முயற்சிக்கு நோக்கியா செல்போன் நிறுவனம் அவருக்கு உதவி செய்தது. 1994–ம் ஆண்டு முதன் முறையாக எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Close