அதிரை கடற்கரைத் தெரு 8வது வார்டில் இலவச வேஷ்டி சேலைகள் வழங்கப்பட்டன! (படங்கள் இணைப்பு)

அதிரை கடற்கரைத் தெரு எட்டாவது வார்டுக்கு உட்பட்ட மக்களுக்கு இன்று இலவச வேஷ்டி சேலை வழங்கப்பட்டது. அதிரையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒவ்வொரு வார்டுகளாகப் இலவச வேஷ்டி சேலைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று 8 வார்டு மக்களுக்காக வந்திறங்கிய இலவச வேஷ்டி சேலைகளை வார்டு கவுன்சிலர் சேனா மூனா.ஹாஜா முஹைதீன் அவர்கள் வழங்கினார்.

இதில் அந்த வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டு இலவச வேஷ்டி சேலையினை பெற்றுச் சென்றனர். அதிரையில் மேலும் உள்ள  வார்டுகளில் தமிழக அரசால் வழங்கப்படும் இலவச வேஷ்டி சேலைகள் விரைவில் விநியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Close