Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள் தமிழகம்

அதிரை கரீம் அவர்கள் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம்!

image

தஞ்சையில் நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு பட்டுக்கோட்டையில் இருந்து 100 வாகனங்களில் செல்ல முடிவு செய்யபட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.

ஆலோசனை கூட்டம்

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி ஆலோசனைக்கூட்டம் எம்.எல்.ஏ இல்லத்தில் நடைபெற்றது. தஞ்சை தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் என்.ஆர்.ரெங்கராஜன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். நகர தலைவர் ஏ.கே.குமார் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.எல்ஏ.சிதம்பரம், மாநில செயற்குழு உறுப்பினர் அந்தோணிசாமி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் திருச்செந்தில், மாவட்ட மாணவர் அணி தலைவர் சுசீந்திரன், வட்டார தலைவர்கள் பழனிவேல், வைத்திலிங்கம், பிரபு, நகர தலைவர்கள் அதிரை அப்துல்கரீம், மதுக்கூர் ஜான் தனசேகரன் மற்றும் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம்

வருகிற 15-ந் தேதி அன்று தஞ்சையில் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்துக்கு பட்டுக்கோட்டை தொகுதியிலிருந்து 100 வாகனங்களில் 2 ஆயிரம் பேர் கலந்து கொள்வது, காமராஜர் பிறந்தநாள் விழாவை பட்டுக்கோட்டை நகர, கிராம பகுதிகளில் தொகுதி முழுவதும் கொடியேற்றி வைத்து சிறப்பாக கொண்டாடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.