அதிரை பேரூராட்சிக்கு SDPI கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் இலியாஸ் அவர்களின் கண்டனம் (வீடியோ இணைப்பு)

pudumai st saakadai ap

அதிரை புதுமனை தெருவில் கடந்த ஒருவாரகாலமாக கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சித்தீக் பள்ளிவாசல் அருகே வாய்க்காலில் இருந்து எடுக்கப்பட்ட கழிவு மணல்கள் சாலையோரம் கொட்டிவைக்கப்பட்டிருக்கிறது. இதனால் தொழுகைக்கு வரும் இஸ்லாமியர்கள் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இதனை கண்டிக்கும் விதமாக இன்று காலை முதல் அங்கு கழிவு மணல்களை அகற்றும்விரையில் பணிகளை மேற்கொள்ள விடுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முகம்மது இலியாஸ் அவர்கள் தெரிவித்திள்ளார். அவர் தெரிவித்த காணொளியும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

https://youtu.be/uUIQPwjWwYU

Close