அதிரை அருகே சாலை விபத்து!

அதிரையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் ஆக்ஸ்போர்டு பள்ளி அருகில் சைக்கில் மீது பைக் மோதியது. இதில் சைக்கிளில் வந்த நபர் காயமடைந்தார். பைக்கில் வந்த நபர் வந்த வேகத்தில் மோதி விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். இதனை அடுத்து விபத்தில் காயமடைந்த நபரை அருகிலுருந்தவர்கள் மீட்டு முதலுதவி வழங்கினர். இப்பகுதியில் அதி வேகத்தில் கவனமின்றி செல்லும் வாகன ஓட்டிகளால் அதிகளவில் வாகன விபத்து ஏற்ப்படுகிறது. நாம் சரியாக சென்றாலும் எதிரில் வருபவர் செய்யும் தவற்றின் காரணமாக விபத்துகள் ஏற்படுகிறது.

Advertisement

Close