அதிரை போஸ்ட் ஆபிஸ் தெரு வியாபாரிகளின் கோரிக்கையை தட்டிக் கழிக்கும் அதிரை பேரூராட்சி!

அதிரை போஸ்ட் ஆபிஸ் தெரு தீன் மெடிக்கல் அருகே பல நாட்களாக கழிவு நீர் கால்வாய் மூடப்படாமல் உள்ளது. இதனால் அங்கு துர்நாற்றமும், கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இப்பகுதியில் நிலவும் இந்த சுகாதார சீர்கேட்டினால் கொடிய நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

இது குறித்து அப்பகுதியில் கடை நடத்தி வரும் ஒருவர் நம்மிடம் கூறுகையில் “கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அதிரை பேரூராட்சியால் இந்த கால்வாய் சுத்தம் செய்வதற்க்காக இந்த கால்வாய் உடைக்கப்பட்டது. இதனை சரி செய்து மூடும்படி பலமுறை பேரூராட்சியிடம் கோரிக்கை வைத்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. எப்போது தொடர்பு கொண்டு புகாரளித்தாலும் இப்போ வரேன், அப்போது வரேன் என்று தான் இழுத்தடிக்கின்றனர். பேரூராட்சியில் புகார் அளித்தால் “செவிடன் காதில் ஊதிய சங்கு” போன்று எங்களுடைய புகாரை கண்டுகொள்ளவே இல்லை. இதனால் நாள்தோறும் இங்கு கொசுத் தொல்லையில் தவிக்கிறோம். இந்த கொசுத்தொல்லையாலும் துர்நாற்றம் காரணமாக இப்பகுதியில் தொழில் செய்வதற்கே மிகவும் கடினமாக உள்ளது. எங்களின் துயர் துடைக்க அதிரை பேரூராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

 

Advertisement

Close