நோன்பு

 

நோன்பு இருப்பது – உடல்
இளைக்கவா ? இருக்கலாம்!

நோன்பு இருப்பது – மனம்
ஒருமை படவா ? இருக்கலாம்!

நோன்பு இருப்பது – ஏழையின்
பசியை உணரவா? இருக்கலாம்!

நோன்பு இருப்பது – கெட்ட
பழக்கத்தை விட்டொழிக்கவா? இருக்கலாம்!

நோன்பு இருப்பது – உடல்
கழிவை அகற்றவா? இருக்கலாம்!

நோன்பு இருப்பது – இன்சுலினின்
சுரப்பியை சுறுசுறுப்பாக்கவா? இருக்கலாம்!

நோன்பு இருப்பது – மெடபாலிஸத்தை
துறித படுத்தவா? இருக்கலாம் !

நோன்பு இருப்பது – மூளை
வேலை செய்வதை சரிப்படுத்தவா? இருக்கலாம்!

நோன்பு இருப்பது – உடல்
எதிர்ப்பு சக்தியை சக்திவாய்ந்ததாக ஆக்கவா? இருக்கலாம்!

இன்னும் அறிவியலுக்கும், மனிதனின் அறிவிக்கும்
புலப்படாத பல நன்மைகள் இருக்கலாம்!

ஆனால் இறை நம்பிக்கை கொண்ட நாம்
நோன்பு இருப்பது ஒரு முக்கிய காரணத்திற்காக – அது
இறை கட்டளைக்கு அடி பணிவது என்பதுதான்

இறைவா எங்கள் நோன்பையும், இபாத-த்துகளையும்
ஏற்றுக்கொள்வாயாக. ஆமீன்.

இறைவா எங்களை நல்ல முக்மினாக
ஆக்கி தருவாயாக ஆமீன்.

Dr. ராஸிக் அஹ்மத்

Close