Adirai pirai
posts

இது ஓர் அபூர்வமான வரம் – ஒன்பது மாதங்களில் 4 குழந்தைகளைப் பெற்ற தாய்!

image

முதலாவது ஆண் குழந்தை பிரெடி பிறந்து 9 மாதங்களுக்கு பின்னர் ஒரே தடவையில் 3 குழந்தைகள் பிறந்தன. * இந்த தம்பதிகள் தற்போது வாரமொன்றுக்கு 175 பம்பஸுகளை மாற்றுகின்றனர். 80 போத்தல் பாலை பிள்ளைகளுக்கு ஊட்டுகின்றனர். * 8000 தம்பதியரில் ஒருவருக்கே 3 குழந்தைகள் ஒரே தடவையில் பிறக்கின்றன என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. நான்கு குழந்தைகளைப் பெற்ற மகிழ்ச்சி இருந்தாலும், இந்த பெற்றோர்கள் உடல் ரீதியாக எவ்வளவு பலவீனமாக இருப்பார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. ‘சில வேளைகளில் தங்களுக்கு தேனீர் கோப்பையை தூக்குவதற்குக் கூட முடியவில்லை’ என்கின்றனர் இந்தத் தம்பதியர். அவர்களது அனுபவப் பகிர்வு இப்படி இருக்கிறது.

  
”ஸ்டான்லி, டெய்சி, ரெஜி ஆகிய மூவரும் அழகான, மகிழ்வையூட்டும் குழந்தைகளாக இருந்தாலும் அவர்களைக் கவனித்துக் கொள்வதற்கு நிறைய உடலுழைப்பு தேவைப்படுகின்றது, அதிகாலை 6 மணிக்கு அவர்கள் கண் விழிப்பதிலிருந்து 12 மணித்தியாலங்களின் பின்னர் அவர்கள் உறங்கச்செல்லும் வரை சாராவுக்கும், பென்னிற்கும் மூச்சுவிட நேரமில்லையாம். சில நேரங்களில் மிகவும் களைத்துப் போய்விடுவோம், சோபாவில் விழுந்து ஒருவருக்கொருவர் சொல்லமலேயே உறங்கிப் போய்விடுவோம் என்கிறார் சாரா. சில நாள்களில் எங்களுக்கு உணவுண்ண கூட நேரமிருக்காது, சாப்பிட்டோமா என்று கூட நினைவிருக்காது என்கிறார் அந்த தாய். தாங்கள் எண்ணியதற்கு மாறான வாழ்க்கை இதுவென தம்பதியர் இருவரும் ஏற்றுக்கொள்கின்றனர். மூன்று வருடங்களுக்கு முன்னர் நாங்கள் எங்கள் குடும்பம் குறித்துத் திட்டமிட்டோம்.

அப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுப்பது என்பதுதான் எங்கள் திட்டம். ஆனால் இயற்கைக்கு எங்கள் திட்டம் பலிக்கவில்லை. மூத்தவன் பிரெடி. 2013 ஜூனில் பிறந்தான். அவன் பிறந்த சில நாள்களில் நான் மீண்டும் கர்பமானேன். இது ஓர் அபூர்வமான வரம் என்ற போதிலும் தாம் அவ்வாறு ஆரம்பத்தில் கருதவில்லை என்கின்றனர் தம்பதியர். முதலில் மருத்துவர் மூன்று குழந்தைகள் என தெரிவித்தவேளை சாரா கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.

தான் அழுவதற்கு தமது பொருளாதார நிலையே காரணம் என்று சாரா தெரிவித்துள்ளார். மகிழ்ச்சிக்கு பதில் அச்சமும், கவலையுமே அவர்களை சூழ்ந்திருக்கின்றது. கருத்தரித்து 8 மாதத்தில் சத்திரசிகிச்சை மூலமாக மூன்று குழந்தைகளும் பிரசவிக்கப்பட்டன. அப்போது ஸ்டான்லியின் இதய துடிப்பு தீடிரென்று குறைந்து பின்னர் இயல்பான நிலைக்கு வந்தது. அதன் பின்னர் பெற்றோர் இருவருக்கும் மூச்சுவிடநேரம் இல்லாத நிலைதான். சாராவுக்கு தனது வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்ற குணம்.

இதனால் அவர் எப்போதும் வீட்டை துப்பரவுசெய்து கொண்டே இருப்பாராம். ஓய்வு எடுக்க வேண்டிய நேரங்களில் கூட அவர் வீட்டை துப்புரவு செய்வாராம். இது தவிர தம்பதியர் இருவரும் இரண்டு மணித்தியாலங்கள் கடைகளுக்குச் சென்று நேரத்தைச் செலவழிப்பராம். இதன்போது தங்கள் குழந்தைகள் நால்வருக்கும் தேவையான பெருள்களைக் கொண்ட மூடைகளுடனேயே வீடு திரும்புவராம். தர்மசங்கடம் நாங்கள் குழந்தைகளோடு வெளியில் சென்றால் இவை உங்களுடைய குழந்தைகளா? சோதனைக் குழாய் குழந்தைகளா என்று எல்லோரும் கேட்பர்.

இந்த கேள்விகள் எங்களுக்கு மிகவும் தர்மசங்கடமாக இருக்கும். ஆரம்பத்தில் இந்தக் கேள்விகள் சாதாரணமாக இருந்தன. இப்போது எரிச்சலாக இருக்கிறது. நான் என் முதுகில் இது என் குழந்தைகள்தான் என எழுதி ஒட்டிக் கொண்டு போகப் போகிறேன் என்கிறார் சாரா. நான்கு குழந்தைகளை வளர்ப்பது கடினமான விடயம்தான். ஆனால் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். எங்களுக்கு குழந்தைகள் ஒரு பெரும் வரம் என்றே நான் கருதுகிறேன்.- என்கிறார் அந்தப் பெண்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy