துபாயில் சென்னை நியூ காலேஜ் முன்னால் மாணவர்கள் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!

image

துபாயில் புது கல்லூரியில் 2001 – 2003 வரை பயின்ற மாணவர்கள்,  முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியோடு இப்தார் நிகழ்வையும் நடத்தினர். இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கு சூடான்,சவுதி அரேபியா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பணியாற்றும் முன்னாள்  மாணவ நண்பர்கள் பிரத்யோகமாக இந்நிகழ்ச்சிக்காக  துபாய் வருகை தந்து  பங்கேற்றனர்.

தொடர்ச்சியாக 5 வருடமாக இது போன்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். ஆண்டுகள் பல கடந்து பல நாடுகளிலும் பிரிந்து வாழ்ந்தாலும் ஆண்டுக்கொருமுறை இது போன்று அனைவரும் சந்திப்பது மனதிற்கு மகிழ்ச்சியை தருவதாக  முன்னாள் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

Close