சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல விமான கட்டணத்தில் 50% சதவீதம் தள்ளுபடி!

image

சிங்கப்பூர் உருவாகி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக அங்கே பொன்விழா கொண்டாடப்படுகிறது.

சிங்கப்பூர் மற்றும் இந்தியாவுக்கிடையேயான ஐம்பது ஆண்டு கால நல்லுறைவைக் கொண்டாடுவதற்காக சிங்கப்பூர் சுற்றுலா கழகத்துடன் டைகர் ஏர் விமானப் போக்குவரத்து நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது.

இந்த சிறப்பு தருணத்தை கொண்டாடுவதற்காக ஐந்து இந்திய நகரங்களிலிருந்து சிங்கப்பூர் செல்லும் அனைத்து டைகர்ஏர் விமானங்களிலும் 50% கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று டைகர் ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது.

இக்கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தியப் பயணிகளுக்கு அனைத்து ஒரு வழி கட்டணம் இந்திய ரூபாய் 3,799 ல் தொடங்குகிறது .

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி மற்றும் திருச்சியிலிருந்து பயணம் செல்லும் பயணிகள், இந்தச் சிறப்பு சலுகையை, 2015 ஜூலை 7 ம் தேதியிலிருந்து 2015 ஜூலை 15ம் தேதி வரை முன் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்தச் சலுகை பொருந்தக்கூடிய பயணக்காலம் ஆகஸ்ட் 04, 2015 முதல் நவம்பர் 06, 2015 வரை ஆகும்.

Close