ஆம்பூரில் கைதானவர்கள் பெருநாள் கொண்டாட விடுதலை செய்யப்பட வேண்டும் – முஸ்லிம் லீக் கோரிக்கை!

image
ஆம்பூரில் கைதான அப்பாவிகளை ரம்ஜான் பெருநாள் கொண்டாடும் விதமாக விடுதலை செய்ய வேண்டும் என்று இ.முஸ்லீம் லீக் தேசிய மத்திய மண்டல அமைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் விருந்தில் கலந்துகொண்ட அப்துற்றஹ்மான் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது இதனை தெரிவித்தார்.

மேலும் “இன்று இங்கு நடைபெற்ற இப்தார் நிகழ்வில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து சமூக மக்களும், அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொண்டது தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை யாராலும் கெடுக்க முடியாது என்பதை உறுதி படுத்தும் வண்ணம் அமைந்தது.

ஆனால், ஆம்பூரில் சமூக நல்லிணக்கத்திற்கு மாற்றான நிகழ்வுகள் நடக்கின்றன . ஆம்பூர் ஷமீல் அஹமது மரணத்திற்கு காரணமான மார்டின் என்ற போலீஸ் அதிகாரி மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற அசம்பாவித சம்வத்திற்கு தொடர்பில்லாதவர்களை கைது செய்தது தவறு , புனித மிக்க ரமலான் மாதத்தில் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது கண்டிக்கத்தக்கது . அப்படி கைது செய்தவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் . அவர்களை ரமலான் கொண்டாடும் வகையில் விடுதலை செய்ய வேண்டும். 144 தடை உத்தரவை உடனே நீக்கவேண்டும்” என்றார்.

Close