துபாயில் 20 கிலோ தங்கத்தை பரிசாக பெற்ற இந்திய பெண்!

கேரளாவைச் சேர்ந்த ஆன் என்ற இளம்பெண், கென்யாவில் கட்டமைப்பு கேபிள் பொறியாளராக பணிபுரிகிறார்.

கடந்த வாரம் முன்பு வந்த ஒரு தொலைபேசி அழைப்பால் தற்போது தலைகால் புரியாமல் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார். காரணம் அவருக்கு வந்த அழைப்பில் நீங்கள் துபாய் மெகா ஷாப்பிங் திருவிழா பரிசுப் போட்டியில் 20 கிலோ தங்கம் வென்றிருக்கிறீர்கள் என்று இன்ப அதிர்ச்சி கொடுத்ததுதான்.

 அதன் இந்திய மதிப்பு 5 கோடி ரூபாய். தனது 25-வது பிறந்த நாளுக்காக ஒரு ஜோடி தங்க கொலுசுகள் பரிசாக கிடைத்தது. அத்துடன் அவருக்கு மூன்று பரிசுக்கூப்பன்கள கிடைத்தன. அந்த கூப்பன்களில் அவரது பெயரை எழுதி, நிறுவனமே போட்டிக்கு அனுப்பியத போட்டியில் வென்றால் தன் அப்பாவிற்கு ஒரு கார் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தார்.

இதுகுறித்து, பேசிய துபாய் தங்க மற்றும் ஜூவல்லரி குழுவின் பொது மேலாளர் டாமி ஜோசப் ‘‘இந்த வாரத்திற்குள் அவருக்கு 20 கிலோ தங்கம் வழங்கப்படும்’’ என்று தெரிவித்தார். தற்போது ஆன் தனது அப்பாவிற்கு என்ன கார் வாங்கலாம் என்று யோசித்து வருகிறார்.

Advertisement

Close