சென்னை விமானம் விபத்துக்குள்ளானது!

சென்னையில் அந்தமான் செல்ல தயாராக இருந்த விமானம், ஏரோ பிரிட்ஜ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 110 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

image

சென்னை விமான நிலையத்தில் இன்று காலை 7.45 மணி அளவில் 124 பயணிகளுடன் அந்தமான் புறப்படுவதற்காக `ஏர்கோ’ விமானம் தயார் நிலையில் இருந்தது. பயணிகள் ஏறுவதற்காக `ஏரோ பிரிட்ஜ்’ (இரும்பு ஏணி படிக்கட்டு) பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது திடீரென `ஏரோ பிரிட்ஜ்’ இடித்ததில் விமானத்தில் 5 செ.மீ. அளவில் ஓட்டை விழுந்து சேதம் ஏற்பட்டது.

இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் விரைந்து வந்து விமானத்தை ஆய்வு செய்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து சென்னை-அந்தமான் பயணம் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் அனைவரும் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

Close