அதிரையில் வட்டியில்லா கடன் வழங்கிவரும் கர்ழன் ஹசனாவின் அன்பான வேண்டுகோள்!

image

அஸ்ஸலாமு அழைக்கும்

ஆண்புள்ளம் கொண்ட அதிரை வாழ் சகோதரர்களே

நமதூரில் கடந்த 4,5 ஆண்டுகளுக்கு முன்னதாக “கர்ழன் ஹசனா” அழகிய கடன் அரக்கட்டளை என்ற ஏழை எளிய மக்களுக்காக அவர்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்க்காக வட்டியில்லா கடன் உதவி வழங்கி வருகின்றது.

அதாவது ஏழை எளிய மக்கள், தட்டு வண்டி தொழில்செய்வோர், நடைபாதை கடை, பெட்டிக்கடை, கணவனை இழந்து சுய தொழில் செய்யும் பெண்கள், வட்டியின் பக்கம் இவர்கள் போய்விடக்கூடாது, என்பதற்க்காக வட்டியினால் பொதுமக்கள், வியாபாரிகள், மற்றும் பெண்கள் எவ்வளவு இழிவான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதை நாம் அறிவோம். அதனால் பல சமுக பிரச்சனைகள் உருவாகுவதற்க்கு காரணமாகிவிடுகின்றது.

இப்பிரச்சனைகளை கூறிக்கொண்டே போகலாம். அதற்க்கு ஒரு வழி காணவேண்டும் என்பதற்க்காக தான் இது துவங்கப்பட்டது.

அல்லாஹ்வின் உதவியால் கிட்டத்தட்ட 200 நபர்களுக்கும் மேல் ரூ.5000 வட்டியில்லா கடன் கொடுத்து திரும்ப பெறப்பட்டுள்ளது.

உங்களைப்போன்ற ஈகை குணம் கொண்ட நல்லுள்ளங்களின் வாயிலாக சிறு தொகையினை (ஆயுட்கால உறுப்பினராக சேர்ந்து) பெற்று அதிலிருந்து தான் கடன் கொடுத்து வருகின்றோம்.

வட்டி என்னும் அரக்கனை ஒழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் இது ஆரம்பிக்கப்பட்டது.

இன்ஷா அல்லாஹ் இது வருங்காலத்தில் வட்டியில்லா வங்கிச் சேவையாக மாறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இதில் தாங்கள் உறுப்பினராக சேர்வதுடன் தாங்களும் பிறரை இதில் இணைத்து விடுவதால் இதன் வளர்ச்சி அதிகரிக்கும்.

உங்களின் உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கி எஙுடன் தொடர்ந்து தொடர்பி ல் இருக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அல்லாஹ் உங்கள் உதவிகளை பொருந்திக் கொள்வானாக. ஆமீன்

தொடர்புக்கு,
தலைவர்: 
அப்துல் ரஹீம் – 9047354122

செயலாளர்: 
ஷேக் அலி – 9842351647

ஒருங்கிணைப்பாளர்: ஜமால் முகமது – 9791438912

அலுவலகம்,
அதிரை கர்ழன் ஹஸனா
N.S.A பில்டிங் முதல் மாடி,
42D/4, புதுத் தெரு வடபுறம்,
ஸ்டேட் பேங்க் அருகில்,
அதிராம்பட்டினம்.image

image

Close