அதிரை காதிர் முகைதீன் பள்ளி முன்னாள் மாணவர் உடல்நலக் குறைவால் மரணம்!

image

அதிரை காதிர் முகைதீன் பள்ளியின் முன்னாள் மாணவர் ரியாஸ் அஹமது. நீடாமங்கலத்தை சேர்ந்த இவர் அதிரை காதிர் முகைதீன் பள்ளியில் 5 வருடங்கள் படித்தார். இவருடைய தந்தை பெயர் முசாபர் கனி. பல வருடங்களுக்கு முன்னர் 5 ஆண்டுகள் நமதூர் பேருந்து நிலையத்தில் டீ ஸ்டால் நடத்தி வந்துள்ளார். இவருடைய தாயார் ஃபாத்திமா பீவி நமதூர் அரசு மருத்துவமனையில் 5 ஆண்டுகள் செவிலியராக பணிபுருந்து வந்தார். இவருக்கு அப்துல் பயான் என்ற சகோதரரும் உண்டு. தற்போது இவர்கள் குடும்பத்தோடு நீடாமங்களத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் ரியாஸ் அஹமது புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இவர் நேற்று பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வஃபாத்தாகிவிட்டார். அதிரை மக்களிடம் மிகவும் பழக்கமான இவரது உடல் இன்று கூத்தானல்லூரில் அடக்கம் செய்யப்படுகின்றது. இவர்களின் மறுமை வாழ்வுக்காக துஆ செய்வோம்.

Close